Sunday, February 15, 2009

பழமொழியும் விளக்கமும் - படிவம் 3

1. அணைகடந்த வெள்ளம் அழுதாலும் வராது.

விளக்கம்:
நடந்து முடிந்துவிட்ட ஒரு காரியத்தை அல்லது கைவிட்டுப்போன ஒரு
பொருளை நினைத்து வருந்திப் பயனில்லை.

2. எறும்பு ஊரக் கல்லும் தேயும்.

விளக்கம்:
தொடர்ந்து ஒரு செயலைச் செய்து வந்தால் எவ்வளவு கடினமானதாக
இருந்தாலும் நாளடைவில் மிகவும் எளிதாகி விடும்.

3. நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

விளக்கம்:
ஒரு பொருளின் அல்லது ஒருவரின் அருமை அப்பொருளோ அவரோ
இல்லாத போதுதான் வெளிப்படும்.

4. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.

விளக்கம்:
எந்தவிதமான காரியங்களைச் செய்தாலும் தன் நோக்கத்தில் வெற்றி பெறுவதிலேயே கருத்தைச் செலுத்த வேண்டும். கொண்ட நோக்கத்தை மறந்து விட்டுக் கவனத்தை வேறொன்றில் செலுத்தல் கூடாது.

5. பதறாத காரியம் சிதறாது.

விளக்கம்:
பொறுமையுடன் செய்யப்படும் ஒரு செயல் சிறப்பாக முடிவு பெறும்.

2 comments:

  1. ஐயா..

    பழமொழி எண் 4-கின் விளக்கம், பழமொழி எண் 5-னுடையது. தயவு கூர்ந்து கவனிக்கவும்.

    ReplyDelete
  2. அன்பு குமரன்,

    சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

    ReplyDelete