Sunday, February 15, 2009

செய்யுள் - படிவம் 3 ( திருவருட்பா )


திருவருட்பா - திருவருட் பிரகாச வள்ளலார்

2. இயற்கையுண்மை வடிவினரே அணையவாரீர்
எல்லாஞ்செய் வல்லவரே அணையவாரீர்
இயற்கைவிளக் கத்தவரே அணையவாரீர்
எல்லார்க்கு நல்லவரே அணையவாரீர்
இயற்கையின்ப மானவரே அணையவாரீர்
இறைமையெலா முடையவரே அணையவாரீர்
இயற்கைநிறை வானவரே அணையவாரீர்
என்னுடைய நாயகரே அணையவாரீர்.


விளக்கம்:


இறைவன் இயற்கையே உருவானவர்; உண்மைப் பொருளாகவும்
விளங்குகின்றார்; அனைத்தையும் செய்யும் ஆற்றல் உடையவர்; உயிர்கள்
அறிவு விளக்கம் பெறச்செய்பவர்; விருப்பு வெறுப்பு இல்லாமல்
எல்லார்க்கும் நல்லவராக இருப்பவர்; உயிர்களுக்கு இன்பத்தை அளிப்பவர்;
உயிர்களுக்குத் தலைமை தாங்கும் பண்மை உடையவர்; பஞ்சபூதங்களாகக்
காட்சி தருபவர். அனைத்துமாக இருக்கின்ற இறைவன் அருள்புரிய
வேண்டும்.

4 comments:

  1. வணக்கம் ஐயா..

    அருமையான வலைத்தளம்.. வலைப்பூங்காவிலும் மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்திலும் இணைத்திருக்கிறேன்.

    தொடரட்டும் உங்களது பணி..

    ReplyDelete
  2. //இறைவன் இயற்கையே உருவானவர்; உணமைப் பொருளாகவும்//

    எதிர்பாரா அச்சுப்பிழை

    உணமை=உண்மை

    ReplyDelete
  3. அன்பு சதீசு,

    தங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  4. அன்பு குமரன்,

    'உண்மை'யிலேயே எதிர்பாரா அச்சுப்பிழைதான்!

    ReplyDelete